மின்னொளி கபடி போட்டி

மின்னொளி கபடி போட்டி நடந்தது.;

Update: 2023-02-04 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் இம்மானுவேல் சேகரன் திடலில் கபடி வீரர் சுரேந்திரமுகன் நினைவு தினத்தை முன்னிட்டு சின்னக்காளை கபடி குழு சார்பாக மாநில அளவில் ஆண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 85 அணிகள் கலந்து கொண்டன. பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் சாமி, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை தலைவர் செல்வ கணேசன், ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் ஊர் நாட்டாண்மை சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகரன், முனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்