கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கடையநல்லூரில் கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி நடந்தது.

Update: 2023-09-26 18:45 GMT

கடையநல்லூர்:

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது. முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். ஷிபா மருத்துவமனை மருத்துவர் ஜவகர்சலீம், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 19 கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, முன்னாள் இந்திய கபடி அணி தலைவர் மணத்தி கணேசன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்