பண மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

பண மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Update: 2022-09-12 20:34 GMT

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பி.தங்கவேலு. இவர் தற்போது திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் புஞ்சைபுளியம்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, 2014-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணத்தை வாங்கி மோசடி செய்தது தொடர்பாக ஒரு வழக்குபதிவு செய்து இருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சத்தியமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு சாட்சி அளிக்க ஆஜராகுமாறு பி.தங்கவேலுவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்