23 துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 துணை தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 துணை தாசில்தார்கள் பணிஇட மாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
துணை தாசில்தார்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 23 துணை தாசில்தார்கள் பணிஇடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பர்கூர் துணை தாசில்தார் (தேர்தல்) செல்வராஜ், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்லா பகஷ் பாஷா, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், தலைமை உதவியாளர் (கியூ பிரிவு) கூடுதல் பொறுப்பு (தலைமை உதவியாளர் ஜி பிரிவு) ஆகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் அஞ்செட்டி துணை தாசில்தார் (தேர்தல்) கணேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜே பிரிவு), போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராகவும் (சுத்த நகல் பிரிவு) நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் பிரிவு சுபாஷினி, தேன்கனிக்கோட்டை துணை தாசில்தாராகவும் (தேர்தல்), தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், கிருஷ்ணகிரி துணை தாசில்தாராகவும் (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டு உள்ளனர்.
போச்சம்பள்ளி
ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயராமன், ஊத்தங்கரை மண்டல துணை தாசில்தாராகவும் -2 (சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி), போச்சம்பள்ளி துணை தாசில்தார் (தேர்தல்) முருகன், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஐ பிரிவு) பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளர் (சுத்த நகல் பிரிவு) அமுதா, மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (கனிமம்) சுரேந்திரன், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலராகவும், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயன், மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (கனிமம்) நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அஞ்செட்டி
ஓசூர் துணை தாசில்தார் வெற்றிவேல், ஓசூர் துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இ பிரிவு பாரதி, போச்சம்பள்ளி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஐ பிரிவு) சகாதேவன், போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பி பிரிவு ஜெயபால், ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அஞ்செட்டி மண்டல துணை தாசில்தார் சந்திரன், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) மணிகண்டன், அஞ்செட்டி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசன், பர்கூர் துணை தாசில்தாராகவும் (தேர்தல்) நியமிக்கப்பட்டு உள்ளனர். சூளகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் சகுந்தலா, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (இ பிரிவு), சூளகிரி துணை தாசில்தார் (தேர்தல்) அருள்மொழி, சூளகிரி தலைமையிடத்து தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஓசூர்
தேன்கனிக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராஜாக்கண்ணு, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஆர் பிரிவு) அரவிந்த், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (பி பிரிவு), ஓசூர் துணை தாசில்தார் -1 செட்டில்மெண்ட் ஆனந்த், ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் ஆகவும் பணிஇட மாற்றம் செய்யபபட்டுள்ளனர்.