திருப்பத்தூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 104 பேருக்கு பணி நியமான ஆணை
திருப்பத்தூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 104 பேருக்கு பணி நியமான ஆணை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரேவதி தொடங்கி வைத்து பேசினார். முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, 566 பேர் பங்கேற்றனர்.
சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்தூர். வாணியம்பாடி பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் எல்.ஐ.சி, பொதுநிர்வாகத்துறை நிறுவனம் உள்பட 16 வகையான நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர்.
அதன்படி 54 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம், 104 பேருக்கு வேலைவாய்ப்பிற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எழுமலை செய்திருந்தார்.