இன்று பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் இன்று நடக்கிறது.;
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. தனியார் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒசூர் ஆலையில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் வேலை நாடுனர்கள் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்நிறுவனத்தில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை 9499055913 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.