பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை - பணம் அபேஸ்
பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை - பணம் அபேஸ் செய்யப்பட்டது.
வீரவநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மனைவி மகாலட்சுமி (வயது 45). சுப்பிரமணி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மகாலட்சுமி நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு புதிய பஸ்நிலையத்தில் வீரவநல்லூருக்கு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வைத்து இருந்த கட்டை பையில் மணிப்பர்சில் 21 கிராம் தங்க சங்கிலி, ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.