விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 43). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சின்னவாடியூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் அக்கம்பக்கத்தினர் மாரீஸ்வரியை தொடர்பு கொண்டு தங்களது வீட்டு கதவை உடைப்பது போன்று இரவு நேரத்தில் சத்தம் கேட்டதாகவும் உடனடியாக வருமாறும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாரீஸ்வரி வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் பீரோவில் இருந்த 4 கிராம் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.