நகை திருட்டு

காரியாபட்டி அருகே நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.;

Update: 2022-12-10 19:09 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி, சிலோன் காலனியை சேர்ந்தவர் ராசையா. இவர் மதுரை சென்றுவிட்டார். இவருடைய மனைவி மருதாயி வீட்டை பூட்டி சாவியை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் ராசையாவின் மகள் சாந்தி வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து கிடந்துள்ளது. வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 3,500 மற்றும் 2½ பவுன் செயினை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்