தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு போனது.
கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியை சேர்ந்தவர் சவரிசன். தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 37). இவர் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திப்பனப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சத்யா கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.