நாகர்கோவில்:
ஈத்தாமொழி வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆதிசிவசாமி மனைவி தங்கம் (வயது 61). சம்பவத்தன்று இவர் ஈத்தாமொழியில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் பஸ்சில் ஏறினார். இந்த பஸ் ஆசாரிபள்ளம் சென்றடைந்ததும் தங்கம் பஸ்சில் இருந்து இறங்கி உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். இந்தநிலையில் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பார்த்த போது காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஓடும் பஸ்சில் தங்கத்திடம் இருந்து நகையை மர்மநபர் பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.