மார்த்தாண்டத்தில்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 1¼ பவுன் கம்மல் அபேஸ்டிப்-டாப் ஆசாமிகள் 2 பேரை போலீஸ் தேடுகிறது

மார்த்தாண்டத்தில் நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 1¼ பவுன் கம்மல்களை அபேஸ் செய்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-16 19:15 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 1¼ பவுன் கம்மல்களை அபேஸ் செய்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

டிப்-டாப் ஆசாமிகள்

மார்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி செம்பருத்திவிளையை சேர்ந்தவர் விஜி (வயது38). இவர் மார்த்தாண்டத்திலும், குன்னத்தூரிலும் நகை கடைகள் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று விஜி மார்த்தாண்டத்தில் உள்ள தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மதியம் 1 மணியளவில் டிப்-டாப்பாக உடை அணிந்த 2 மர்ம நபர்கள் கடைக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு கம்மல் வேண்டும் என கேட்டனர்.

உடனே, விஜி கம்மல்களை எடுத்து காட்டினார். அவர்கள் சிறிது நேரம் நகை வாங்குவது போல் அவற்ைற கையில் எடுத்து பார்த்து கொண்டிருந்தனர். பின்னர், 'கம்மல் மாடல் பிடிக்கவில்லை. எதுவும் வேண்டாம்' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

நகைகள் அபேஸ்

அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து விஜி கடையில் இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது 1¼ பவுன் எடையுள்ள 7 ஜோடி கம்மல்களை காணாமல் திடுக்கிட்டார். தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அந்த நகைகளை மர்ம ஆசாமிகள் 2 பேரும் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து விஜி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே அந்த 2 மர்ம ஆசாமிகளும் குன்னத்தூரில் உள்ள விஜியின் மற்றொரு நகைக்கடைக்கும் அன்று காலையில் சென்றுள்ளனர். அங்கிருந்து ஒரு தாயத்து விலைக்கு வாங்கி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடையில் நகை வாங்குவது போல் நடித்து 1¼ பவுன் கம்மல்களை அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

---

Tags:    

மேலும் செய்திகள்