கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

Update: 2022-10-08 09:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

நேற்று காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்