ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கோவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.

Update: 2023-08-10 21:30 GMT


பீளமேடு


கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பாக்கியம் நேற்று முன்தினம் லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து அரசு பஸ்சில் ஹோப் காலேஜிக்கு சென்றார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகளவு இருந்ததாக தெரிகிறது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பாக்கியம் அணிந்து இருந்த 2.5 பவுன் தங்கச்சங்கிலியை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்போில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்