வனத்துறை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-10-17 20:06 GMT

திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66). ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டில் உள்ள தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.18 ஆயிரம், 3 பவுன் தங்க சங்கிலி, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ளான வெள்ளி பாத்திரங்கள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்