நகைப்பட்டறை ஊழியருக்கு கத்திக்குத்து

நகைப்பட்டறை ஊழியருக்கு கத்திக்குத்து

Update: 2022-09-07 14:01 GMT

கோவை

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கிற ரவிக்குமார் (வயது 26). நகை பட்டறை ஊழியர். விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மணி உள்பட 3 பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. அனால் அவர் நன்கொடை கொடுக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மணி உள்பட சிலர் அங்கு வந்த ரவிக்குமாரிடம் மதுக்குடிக்க பணம் தரும்படி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணி மற்றும் அவருடன் வந்த நபர்கள் ரவிக்குமாரை தாக்கியதுடன், கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் காயமடைந்த ரவிக்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, சபரிமணி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்