அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை திருட்டு

அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை திருட்டு போனது.

Update: 2023-02-23 19:19 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள விஷ்ணு நகர் தெருவை சேர்ந்தவர் பண்டரிநாதன் (வயது 59). அரசு பஸ் டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 75 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பண்டரிநாதன் தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்