கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு பறிக்கப்பட்டது.;
வாடிப்பட்டி,
சமயநல்லூர் வளன்நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 60). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அங்காள ஈஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை திருடி சென்றனர். அதேபோல் சமயநல்லூர் முத்தையா கோவில் தெருவை சேர்ந்த சுதாகர் மனைவி ரோகினி (41). இவரும் அந்த திருவிழாவில் சாமி கும்பிட வந்த போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.