தர்மபுரியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-08-30 19:30 GMT

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 47). இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.

போலியான நம்பர் பிளேட்

அப்போது நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டிலும், அதியமான்கோட்டை பகுதியில் நகை பறிப்பிலும் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. இவர்கள் நகை பறிக்க செல்லும் போது மோட்டார் சைக்கிள்களில் போலியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தி இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்