பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகைைய பறித்து சென்றனர்.;

Update: 2023-05-23 20:04 GMT


விருதுநகர் சாத்தூர் ரோட்டில் சின்ன மருளுந்து கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் நாகம்மாள் (வயது 55) என்பவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக அதிகாலை கிளம்பி வந்து கொண்டிருந்த பொழுது தோட்டத்தின் கேட் அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. 2 நபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இந்தநிலையில் திடீரென ஒரு நபர் நாகம்மாளின் வாயை பொத்தி கழுத்தில் கிடந்த கவரிங் செயினை பறித்ததாகவும், மற்றொரு நபர் நாகம்மாளின் காதில் கிடந்த 1 பவுன் தங்க கம்மலை வலுக்கட்டாயமாக அறுத்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். நகையை பறித்த நபர்கள் காரில் ஏறி சென்று விட்டனர். படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்