ஜீப் டிரைவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி ஜீப் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-26 15:09 GMT

போடி ரெயில்வே நிலைய சாலையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 33). ஜீப் டிரைவர். நேற்று முன்தினம் மாலை இவர், போடியில் இருந்து தேனி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்த அருண்குமார் (42) தனது ஆட்டோவில் தேனியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். ஆட்டோவில் அவருடைய தாய் ராஜக்கனி, சகோதரியின் மகள்கள் கேஷிகா (13), மதுமிதா (16) ஆகியோர் பயணம் செய்தனர்.

தேனி-போடி சாலையில் தோப்புப்பட்டி அருகில் வந்தபோது, நாராயணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் நாராயணன் படுகாயம் அடைந்தார். அருண்குமார், ராஜக்கனி, கேஷிகா, மதுமிதா ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாராயணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நாராயணனின் மனைவி அகிலாண்டேஸ்வரி (23), பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர் அருண்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்