ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தது.;

Update: 2022-09-24 19:13 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் இளந்தமிழன் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகளும், கல்லூரி மாணவியுமான மகேஸ்வரியை (20) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், மகேஸ்வரியை பெண் கேட்டு சென்றபோது அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காதல்ஜோடி உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் பெண்ணின் பெற்றோர் மகேஸ்வரியை அழைத்துள்ளனர். ஆனால் அவர் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோருக்கு அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களோடு அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்