மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை

அருப்புக்கோட்டையில் மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2023-08-25 20:36 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மல்லிகை கிலோ ரூ.600

அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ வியாபாரி திலகராஜ் கூறுகையில், தொட்டியாங்குளம், குறிஞ்சாகுளம், மடத்துப்பட்டி, சித்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் பூக்கள் அருப்புக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் என்பதால் மல்லிகை பூ கிலோ ரூ.1,000 வரை விற்பனைஆனது. நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓணம்பண்டிகை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பூக்கள் வியாபாரம் நன்றாக இருந்தது. ஆனால் நேற்று கிலோ ரூ.600-க்கு விற்பனை ஆனது.

விலை சரிவு

அதேபோல முல்லைப் பூ மற்றும் பிச்சிப்பூ கிலோ ரூ.400-க்கும் கேந்தி பூ கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மதுரை உள்ளிட்ட நகரங்களில் தேவைகள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம் ஆகியவற்றை முன்னிட்டு பூக்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான பெண்கள் நேற்று முன்தினமே பூக்களை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது விலை சரிந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்