தொண்டி
திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கிராமத்தில் ஜனனி அம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்ற இக்கோவில் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் அஞ்சுகோட்டை ஆணி முத்து கருப்பர் கோவிலிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக ஜனனி கோவிலை சென்றடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதில் தொடர்ந்து ஜனனி அம்மன் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் ஜனனி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் காளியம்மாள், திருநாவுக்கரசு, சக்தி ஜனனி சேவா குழுவினர் செய்திருந்தனர்.