திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.;

Update:2023-06-07 14:59 IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை, தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சிஅகரம், பேரண்டூர், பனப்பாக்கம், தண்டலம், பருத்திமேன்குப்பம், தும்பாக்கம், காக்கவாக்கம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை கேட்டு மனுக்கள் அளித்தனர். ஜமாபந்தி வரும் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்திரி சுப்ரமணியம் தலைமையில், தாசில்தார் மதியழகன் முன்னிலையில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று 7-ந் தேதி தண்ணீர்குளம், புல்லரம்பாக்கம் மற்றும் பூண்டி குறுவட்டத்தை சேர்ந்த பூண்டி, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், கண்ணம்மாபேட்டை, தோமூர், திருப்பேர், காட்டானூர், அரும்பாக்கம், மோவூர், நெய்வேலி, சித்தம்பாக்கம், ராமதண்டலம், இறையூர், சீயஞ்சேரி, மொன்னவேடு, அல்லிக்குழி பிளேஸ்பாளையம், அரசன்நகரம், உள்ளிட்ட

கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. 8-ந்தேதி பாண்டூர் குறுவட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 9-ந்தேதி வெள்ளியூர் குறுவட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 13-ந் தேதி அம்மனம்பாக்கம் குறுவட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 14-ந் தேதி திருவூர் குறுவட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். 15-ந் தேதி கிளாம்பாக்கம், ஆயலூர், தொழுவூர், அரண்வாயல் கிராமங்களுக்கும், வெங்கத்தூர் குறுவட்டத்துக்குட்பட்ட வெங்கத்தூர், போளிவாக்கம், ஏகாட்டூர், அதிகத்தூர், பிஞ்சிவாக்கம் கிராமங்களுக்கும், 16-ந் தேதி வெங்கத்தூர் குறுவட்ட கிராமங்களுக்கும், 20 மற்றும் 21-ந் தேதி கடம்பத்தூர் குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மப்பேடு குறுவட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும்.

பொன்னேரி தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் அகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய 9 வருவாய் கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் பெற்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்.

திருத்தணி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி ஆர்.டி.ஓ. தீபா தலைமையில் நடைப்பெற்றது. இன்று 2-வது நாள் ஜமாபந்தியில் கோரமங்கலம், மாம்பாக்கம், சூரியநகரம், கிருஷ்ணசமுத்திரம், மத்தூர், அலமேலுமங்காபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. நாளை 3-வது நாள் ஜமாபந்தியில் முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், அகூர், அமிர்தாபுரம், நல்லாணிகுண்டா, சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், வள்ளிம்மாபுரம், தேவசேனாபுரம், திருத்தணி, மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம், வேலஞ்சேரி, சத்திரஞ்ஜெயபுரம், தாழவேடு, பொன்பாடி, கொல்லாகுப்பம், பூனிமாங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெறும்

பள்ளிப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் ஏராளமான பேர் தங்கள் கோரிக்கைகளை வைத்து மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) சில்லறை விற்பனை அதிகாரி ரவி ஜமாபந்தி அதிகாரியாக கலந்து கொண்டார்.

ஆர்.கே. பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன் ஜமாபந்தி அதிகாரியாக கலந்து கொண்டு மக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெற்றார். இதில் தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்