சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திஜூன் 5-ந்தேதி தொடங்குகிறது
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி ஜூன் 5-ந்தேதி தொடங்குகிறது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகாவில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 5-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. முதற்கட்டமாக 5 மற்றும் 6-ந்தேதி வடபொன்பரப்பி குறுவட்டத்துக்கும், 7 மற்றும் 8-ந் தேதி அரியலூர் குறுவட்டத்துக்கும், 9 மற்றும் 12-ந்தேதி ரிஷிவந்தியம் குறுவட்டத்துக்கும், 13 மற்றும் 14-ந்தேதி ஆலத்தூர் குறுவட்டத்துக்கும், 15 மற்றும் 16-ந் தேதி சங்கராபுரம் குறுவட்டத்துக்கும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்று, தீர்வு காண உள்ளார். ஆகவே பொதுமக்கள் தங்கள் குறைகளை குறிப்பிட்டு, உரிய ஆவணங்களின் நகலுடன் மனுக்களை தந்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் சங்கராபுரம் தாசில்தார் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.