உலக புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றதாகும்.;

Update: 2024-01-04 09:56 GMT

மதுரை,

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

உலக புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்