ஜல்லிக்கட்டு காளை இறப்பு

வத்திராயிருப்பு அருகே ஜல்லிக்கட்டு காளை இறந்தது.;

Update:2022-11-14 01:45 IST

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்தில் மங்கம்மாள் கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த வெள்ளையன் என்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்தது.

இந்த வெள்ளையன் காளை வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் காளைக்கு நேரில் வந்து அஞ்சலி ெசலுத்தினர். பல்வேறு போட்டிகளில் வென்று பல்வேறு பரிசுகளை வென்ற வெள்ளையன் காளை இறந்தது வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்