ஜல்லிக்கட்டு காளையை சீதனமாக வழங்கிய தாய்மாமன்
ஜல்லிக்கட்டு காளையை தாய்மாமன் சீதனமாக வழங்கினார்.;
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜல்லிகட்டு மாடுபிடி வீரரான சரவணன் (வயது 34) தான் 5 ஆண்டுகளாக வளர்த்த, ஜல்லிக்கட்டு காளையை அவரது சகோதரி மகனின் காதணி விழாவிற்கு சீதனமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி அந்த ஜல்லிக்கட்டு காளையை அலங்கரித்து, குத்துவிளக்கு, அண்டா, உள்ளிட்ட சீர்வரிசையுடன் சேர்த்து, நேற்று ஊர்வலமாக மேளதாளத்துடன் தனது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் விழா நடைபெறும் பகுதிக்கு அழைத்து சென்றார். ஜல்லிக்கட்டு காளையுடன் வந்த மாடுபிடி வீரரும், தாய் மாமனுமான சரவணனை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு காளையை சீர்களுடன் பரிசாக பெற்றுக்கொண்டனர்.