2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் பாரத்குமார் (வயது 27), அஜித் (28). இவர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும், தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.