தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 35). இவர் அங்குள்ள தனியார் செங்கல் சேம்பரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முத்துமாரி, மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அவர் 8 மாத கர்ப்பமானார். இதுகுறித்து மானாமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை மகிளா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட முத்துமாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ேமலும் அபராத தொகையை பாதித்த பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டார்.