ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான சேர்க்கை நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான சேர்க்கை நீட்டிப்பு;

Update: 2023-06-14 18:45 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பிரிவுகளான மின்பணியாளர்(2 ஆண்டுகள்), கணிப்பொறி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(ஒரு ஆண்டு), உணவு தயாரித்தல்(பொது) ஒரு ஆண்டு, தையல்தொழில்நுட்பம்(1 ஆண்டு) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை-614602 என்ற முகவரில் நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்