கோவில்பட்டியில் திங்கட்கிழமை நடைபெற இருந்தவிவசாயிகள் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

கோவில்பட்டியில் திங்கட்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-04-10 18:45 GMT

கோவில்பட்டி:

நடப்பாண்டு ராபி பருவத்தில் குறைவான மழை காரணமாக மானாவாரி பகுதி களான விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் விளைச்சல் பாதித்துள்ளது. எனவே, மழையின்றி வறட்சியால் பாதிப்படைந்துள்ள இப்பகுதி விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில் பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்ந்து நேற்று உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை செயலாளர் எஸ்.நல்லையா, மாவட்ட தலைவர் எஸ்.எம்.ராமையா, தாலுகா செயலாளர்கள் ஏ.வேலாயுதம், ஏ.லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட உதவி செயலாளர்கள் ஜி.பாபு, வி.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் கூறுகையில், மகசூல் பாதிப்பு தொடர்பாக வேளாண்மைதுறை மூலம் கணக்கிடும் பணி நடந்து வருகிறது. அதன்படி நிவாரணம் வழங்க ஆவண செய்யப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்