ஆண்டு கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதால் 120 வாகனங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு - மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
ஆண்டு கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதால் 120 வாகனங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.;
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன கட்டுப்பாட்டில் 41 ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில் இருந்து இதுநாள் வரை 120 இரு சக்கரம், 3 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்லாமல் கேட்பாரற்று நிறுத்தி சென்று உள்ளனர். இந்த வாகனங்களை வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களையும், உரிய வாகன நிறுத்து கட்டணத்தையும் செலுத்தி வாகனங்களை எடுத்து செல்லலாம். தவறும் பட்சத்தில் அனைத்து வாகனங்களும் அந்தந்தப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.