'வேலூர் கே.பி.குப்பத்திற்கு மகளிர் கல்லூரி கொண்டு வருவது எனது கடமை' - அமைச்சர் துரைமுருகன் உறுதி
கே.வி.குப்பத்திற்கு நிச்சயமாக மகளிர் கல்லூரி கொண்டு வருவேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "கே.வி.குப்பத்திற்கு மகளிர் கல்லூரி கொண்டு வரும் திட்டம் என்ன ஆயிற்று? என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நிச்சயம் நேரம் காலம் வரும். நான் ரெடி, நீங்க ரெடியா? கே.வி.குப்பத்திற்கு மகளிர் கல்லூரி கொண்டு வருவது எனது கடமை. அதை நிச்சயமாக செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.