எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்-எச்.ராஜா பேட்டி

"எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்" என எச்.ராஜா கூறினார்.

Update: 2023-06-27 18:46 GMT

"எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்" என எச்.ராஜா கூறினார்.

பேட்டி

சிவகங்கையில், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டின் குடிமகன், ஒவ்வொருவரும் அரசியலுக்கு வரலாம். அந்தவகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா புகழ் மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமாவளவனின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

2016-ல் மத்தியில் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் இந்தியா நலிவடைந்து போயிருக்கும். மேலும் மெட்ரோ ரெயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார்கள். 6-வது நபராக அண்ணாமலை சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.

கண்துடைப்பு

நெல்லையில் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், பாதிரியார் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்காக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம்.

மணிப்பூர் கலவரம் விரைவில் முடிவுக்கு வரும். சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அங்கு செல்ல அதிகாரமில்லை. சட்ட திட்டங்கள் குறித்து அறியாதவர்களே அமைச்சராக உள்ளனர்.

பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டம் என்பது அமலாக்கத்துறையால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம்.

யார் பிரதமர் வேட்பாளர்?

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் எதிர்க்கட்சிகளால் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியாத நிலைதான் உள்ளது. மேலும் அவர்களது 2-வது கூட்டம் நடக்குமா? என்பதே தெரியவில்லை

சீமான் தமிழ் தேசியம் என்பதை கைவிட்டால் பா.ஜனதாவுடன் நெருங்கி வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்