மின்சாரம் தாக்கி 2 உழவுமாடுகள் பலியான பரிதாபம்

வந்தவாசி அருகே உழவு பணியின்போது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியானது.

Update: 2023-10-01 10:42 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே உழவு பணியின்போது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியானது.

வந்தவாசி டவுன் நெமந்தகார தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு வந்தவாசி அருகே பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

இவருடைய விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டார். இதனையொட்டி வயலில் தண்ணீர் பாய்ச்சி சேறாக மாற்றப்பட்டிருந்தது.

சேற்று வயலில் கலப்பையை பிடித்தவாறு மாடுகளை சின்னப்பையன் மாடுகளை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். வயலில் உள்ள மின்கம்பத்தின் அருகே ஏர் உழுதவாறு மாடுகளை ஓட்டிச்சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார கம்பத்திலிருந்து திடீரென மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 2 மாடுகளும் அந்த இடத்திலேயே துடிதுடித்த பலியாயின. மாடுளை ஓட்டிச்சென்ற சின்னப்பையன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 2 மாடுகளும் தனது கண்ணெதிரிலேயே மின்சாரம் தாக்கி பலியானதை பார்த்து சின்னப்பையன் கதறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்தவாசி உட்கோட்ட மின் பொறியாளர்கள் மற்றும் வந்தவாசி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு உழவு காளை மாடுகள் பலியானதால் மாடுகளை வைத்து கூலிவேலை செய்யும் சின்னப்பையனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னப்பையனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

=======

Tags:    

மேலும் செய்திகள்