ஐ.டி. தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி-தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு

ஐ.டி. தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2023-08-03 21:59 GMT


ஐ.டி. தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ரூ.1 கோடி மோசடி

மதுரை ஞானஒளிவுபுரம் வாய்க்கால்கரை தெருவை சேர்ந்தவர் தனபாலன் கேப்லின் (வயது 65). இவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அழகர்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்த சிந்துஉமாதேவி, அவரது கணவர் மருதுபாண்டி உள்ளிட்ட 5 பேர் என்னை அணுகினர். அப்போது அவர்கள் ஐ.டி.தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக என்னிடம் ஆசை வார்த்தை கூறினர்.

அதை நம்பி ரூ.1 கோடியே 19 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை வாங்கி கொண்டு தொழில் நடத்திய அவர்கள் நான் போட்ட தொகைக்கு எந்த விதமான லாபமும் கொடுக்கவில்லை.

தம்பதி மீது வழக்கு

நான் பணத்தை கேட்ட போதும் அதை கொடுக்காமல் என்னை ஏமாற்றி வந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்