கல்வெட்டில் பெயர் இல்லாத பிரச்சினை:மதுரை மாநகராட்சி துணை மேயர் திடீர் தர்ணா

கல்வெட்டில் பெயர் இல்லாத பிரச்சினை: மதுரை மாநகராட்சி துணை மேயர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்;

Update: 2023-05-09 21:13 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கினார்கள். இந்த முகாமில் துணை மேயர் நாகராஜன் பங்கேற்காமல் புறக்கணித்தார். பகல் 12 மணிக்கு மாநகராட்சிமேற்கு மண்டல அலுவலகத்தில் இருந்து கமிஷனர், மேயர் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் 12.05 மணிக்கு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திற்கு வந்த துணை மேயர் நாகராஜன் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி அன்று சுதந்திர தின பவளவிழாவை குறிக்கும் வகையில் 2 கல்வெட்டுகள் சுவரில் பதிக்கப்பட்டன. அதில் மேயர், கமிஷனர், மேற்கு மண்டல உதவி ஆணையர், மண்டல தலைவர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டில் துணை மேயர் பெயர் இடம்பெறவில்லை.இதனைகண்டித்து கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ள பகுதியில் பிளாஸ்டிக் நாற்காலில் உட்கார்ந்து கடும் வெயிலில் தர்ணா செய்தார்.

பின்னர் அவரிடம் செல்போனில் மேயர் தொடர்பு கொண்டு புதிய கல்வெட்டு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்