பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-12-29 16:56 GMT

சென்னை,

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பல்கலைகழக மானிய குழு வெளியிட்டுள்ளது.

* கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழஙக வேண்டும்.

* புதிய கல்வி கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

* 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

* மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

* பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்