திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-08-30 21:45 GMT

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரெயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே பயணிகளின் வசதிக்காக நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, லிப்ட் ஆகியவை உள்ளன.

மேலும் பயணிகள் தங்கும் அறை, கழிப்பறை, உணவகம், குளிர்பானம் மற்றும் தின்பண்ட கடைகளும் உள்ளன. இதற்கிடையே புதிதாக உணவகம் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்களும் நியமிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடைபெறுகின்றன. மேலும் பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில்திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதையொட்டி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல் ரெயில் நிலையம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.எனவே விரைவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்து விடும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்