சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரமாகுமா?

சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரமாகுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-07-09 21:49 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. தற்போது இங்கு வாகன பரிசோதனை எதுவும் நடைபெறுவதில்லை என கூறப்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் சோதனை சாவடிகளில் வாகன பரிசோதனை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அய்யனார் கோவில் செல்லும் சாலையிலும், செண்பகத்தோப்பு செல்லும் சாலையிலும் சோதனை சாவடி காட்சி பொருளாக உள்ளது. இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஆதலால் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்