குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பா?

குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதா என்று போலீசார் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

Update: 2023-02-20 19:40 GMT

துவரங்குறிச்சி அருகே கஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி செட்டியபட்டி கிராம மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளதாக அப்பகுதி மக்களிடையே நேற்று தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவுக்குப்பின்னரே குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்