கொப்பரை தேங்காய் ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு

கொப்பரை தேங்காய் ஏலத்தில் கலந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-09 18:59 GMT

கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் சாகுபடி செய்த கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்ய வாரந்தோறும் வியாழக்கிழமை குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.80 வரை ஏல விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் சுமார் 87 டன் அளவிற்கு ஏல விற்பனை நடைபெற்றது. இதனால் கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து உள்ள மாவட்டத்தில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்தில் உள்ள மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கொப்பரை தேங்காய் ஏலத்தில் கலந்து கொண்டு பயன் அடையலாம். மேற்கண்ட தகவலை கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான அபிராமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்