திமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை
திமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த அதிக மதிப்புடைய திமிங்கலத்தின் எச்சம் வைத்திருந்ததாக நெல்லையை சேர்ந்த அப்துல் ரகுமான், மனோகரன், தர்மராஜன், ராஜ மன்னார் ஆகிய 4 பேரை பிடித்து வனத்துறையினர் மற்றும் வன பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
திமிங்கல எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாரிடம் வாங்கினார்கள்? எங்கு விற்க முயன்றனர்? என்பது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.