பொதுமக்களுக்கு மிரட்டல்; 3 வாலிபர்கள் கைது

பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-21 18:45 GMT

 விருத்தாசலம், 

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் செல்வராஜ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 27), சதீஷ் (29), ஸ்டீபன் ராஜ் (25) ஆகியோர் அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் வீண் தகராறு செய்ததுடன், அவர்களை அசிங்கமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைபார்த்த போலீசார், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்