ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெற நேர்காணல்
சிவகங்கை மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெற நேர்காணல் ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறுகிறது.
சிவகங்கை,
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜீவன் பிரமான் என்ற இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வூதியதார்கள் ஆதார்எண், வங்கி கணக்கு எண், அசல் ஓய்வூதியப் புத்தகம் வாழ்நாள் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பயன்படுத்தி அஞ்சல் துறையின் வங்கி சேவையை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்துகொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறும் நேர்காணல் ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறவுள்ளது. அல்லது அரசு இ.சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஓய்வவூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று நேர்காணல் செய்யலாம். இ்ந்த தகவலை கலெக்டர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.