கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல்

ஆரணி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்தது.

Update: 2023-01-03 12:21 GMT

ஆரணி

ஆரணி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பதவிக்கான 3 இடங்களுக்கு 1031 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் ஆரணி தாலுகா அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் தலைமையில் இன்று நேர்காணல் நடந்தது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஏ.பாலாஜி, மண்டல துணை தாசில்தார் குமரேசன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நேர்காணலுக்கு வந்தவர்களிடம், பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் வாசிக்கும் திறனை கண்டறிந்தனர்.

தினமும் 100 நபர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்