ஒடிசா ெரயில் விபத்திற்கு பாதுகாப்பு, பராமரிப்பு குறைபாடுகளே காரணம்

ஒடிசா ெரயில் விபத்திற்கு பாதுகாப்பு, பராமரிப்பு குறைபாடுகளே காரணம் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார்

Update: 2023-06-03 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடுகளே காரணம் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது.

மத்திய அரசு பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரெயில்வேயில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. ெடக்னிக்கல், லோகோ பைலட்டுகள் உள்பட பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால் அரசு அதனை சரிசெய்யாமல் தனியார்மயம் மற்றும் குறைந்த அளவு ஊழியர்களையே நியமித்து வருகிறது.

காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்துவதையே பிரதானமாக செயல்படுத்துகிறது. ரெயில்வேயில் 12 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டிய லோகோ பைலட்டுகள் 18 அல்லது 24 மணி நேரம் பணிபுரிகின்றனர்.

பிரதமர் தன்னை முன்னிலைபடுத்துவதை மட்டுமே பிரதானமாக செய்து வருகிறார். மேலும் தற்போது அறிவித்துள்ள நிவாரணம் குறைவான தொகையாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை மத்திய மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்