வனச்சரகர் உள்பட 4 பேரிடம் விசாரணை

மரம் வெட்டியது தொடர்பாக வனச்சரகர் உள்பட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-08-19 20:15 GMT

மரம் வெட்டியது தொடர்பாக வனச்சரகர் உள்பட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சேர்வராயன் வடக்கு

சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அகரம் மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து குப்பனூர்-ஏற்காடு மலைப்பாதைக்கு வர வசதியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக வனப்பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

இந்த நிலையில் கிராம மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறையான அனுமதியின்றி மரங்களை வெட்ட வன அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) எஸ்.கவுதம் விசாரணை நடத்தி, வனக்காப்பாளர் குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அறிக்கை தாக்கல்

மேலும் வனச்சரகர் பரசுராமமூர்த்தி, வனவர்கள் சென்னகிருஷ்ணன், ராகுல், பொன்னுசாமி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் மரங்கள் வெட்ட கிராம மக்களிடம் பணம் பெறப்பட்டது உண்மையா? என்பது குறித்து உதவி வன பாதுகாவலர் கண்ணன் மற்றும் 13 பேர் கொண்ட தனிப்படையினர் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த விசாரணை அறிக்கையை சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை குறித்து அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்